இந்தியாவில் செனகல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவில் உள்ள செனகல் தூதரகத்தின் இராணுவ, கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Abdoulaye TRAORE இன்று (2024 பிப்ரவரி 07) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

இந்தியாவில் செனகல் தூதரகத்துடன் இணைந்த இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகரான Colonel Abdoulaye TRAORE பணியாற்றுகிறார், மேலும் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், கடற்படைத் தளபதி மற்றும் இந்தியாவில் செனகல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு இடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து சிநேகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடற்படை தளபதியின் கடற்படை உதவியாளர் கொமடோர் கோசல வர்ணகுலசூரியவும் கலந்துகொண்டதுடன், இந் நிகழ்வை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.