சபுகஸ்கந்த பண்டைய ரஜமஹா விஹாரஸ்த ஸ்ரீ குணரத்ன தர்ம வித்தியாலயத்தினால் கடற்படைத் தளபதியை கௌரவிக்கப்பட்டது

சபுகஸ்கந்த பண்டைய ரஜமஹா விஹாரஸ்த ஸ்ரீ குணரத்ன தர்ம வித்தியாலயத்தின் பழைய மாணவர்களில் ஒருவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகளின் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்திற்குரிய நாபிரித்தன் கடவல ஞானரத்ன தேரரின் தலைமையில் இன்று (17 மார்ச் 2024) சபுகஸ்கந்த பண்டைய ரஜமஹா விஹாரஸ்த ஸ்ரீ குணரத்ன தர்ம வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சபுகஸ்கந்த பண்டைய ரஜமஹா விஹாரஸ்த ஸ்ரீ குணரத்ன தர்ம வித்தியாலயத்தின் பழைய மாணவர்களில் ஒருவரான கடற்படைத் தளபதி அவர்கள் தேசத்தைக் காப்பாற்றுவதற்காகவும், பௌத்தத்தின் மறுமலர்ச்சிக்காக அயராது உழைத்து அர்ப்பணித்த தியாகத்திற்காகவும் இந்த மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வு ஸ்ரீ குணரதன தர்ம வித்தியாலயத்தின் பிள்ளைகள் வழங்கிய பல கலைநிகழ்ச்சிகளால் மிகவும் வண்ணமயமானது.

மேலும், இந்நிகழ்வில் மகாசங்கத்தினர், அரச அதிகாரிகள், சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய, ஸ்ரீ குணரதன தர்ம வித்தியாலய மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.