புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்

இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற தேஷபந்து தென்னகோன் அவர்கள் இன்று (2024 ஏப்ரல் 01) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

அதன்படி கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய பொலிஸ் மா அதிபரை மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவினால் கடற்படைத் தலைமையகத்திற்கு அன்புடன் வரவேற்கப்பட்டு, கடற்படை மரபுப்படி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், கடற்படை தளபதி அவர்களினால் கடற்படை பிரதானி உள்ளிட்ட கடற்படை முகாமைத்துவ சபையை பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் அறிமுகப்படுத்தினார்.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் 2024 பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கை காவல்துறையின் 36 ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது இதுவே முதல் தடவையாகும். கடற்படை தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் இடையில் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது கடற்படைத் தளபதி பொலிஸ் மா அதிபரின் எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.