பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் குழு கடற்படை தலைமையகத்தை பார்வையிடுகிறது

இலங்கைக்கான ஆய்வுப் பயணமாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணியாளர் பாடநெறியில் பயிலும் மாணவர் அதிகாரிகளைக் கொண்ட விமானப்படை அதிகாரி Air Cdre Faisal Fazal Muhammad Khan தலைமையிலான அதிகாரிகள் குழு 2024 மே மாதம் 07ம் திகதி அன்று கடற்படைத் தலைமையகத்திற்குச் சென்ற அவர்கள் அங்கு தலைமை பணியாளர் ரியர் அட்மிரால் பிரதீப் ரத்நாயக்கவைச் சந்தித்தனர்.

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பதினாறு (16) மாணவர் அதிகாரிகளைக் கொண்ட இந்த அதிகாரி குழு 2024 மே 05 முதல் 10 வரை இலங்கைக்கு ஆய்வுப் பயணமாக இருக்கும்.

இதன்படி, இந்த அதிகாரிகள் குழு கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவைச் சந்தித்து சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

மேலும், இலங்கை கடற்படையின் பங்கு குறித்து கடற்படைத் தளபதி வழங்கிய விரிவுரையில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டதுடன், இந்நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது பாரூக் அவர்களும் கலந்துகொண்டார்.