கடற்படையின் இரத்த தானம் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி 2024 மே மாதம் 19 ம் திகதி அன்று தென்கிழக்கு கடற்படை கட்டளை கடற்படை வைத்தியசாலையில் நடைபெற்றது.

இதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க அவர்களின் மேற்பார்வையின் கீழும் கடற்படையின் சமூக புரவலர் திட்டத்தின் கீழும், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களின் பங்கேற்பின் கீழும் இந்த இரத்த தான நிகழ்ச்சி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியின் தேவைகளுக்காக ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பெருமளவிலான கடற்படையினர் இந்த மாபெரும் சமூக நிகழ்வை வெற்றியடையச் செய்ய முன்வந்து பங்களித்த்துடன் அதற்கு தென்கிழக்கு கடற்படை கட்டளை வைத்தியசாலை மற்றும் மொனராகலை மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய ஊழியர்கள் ஆதரவை வழங்கினர்.