2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக திருகோணமலை துறைமுகத்திலிருந்து தீவுக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான INS 'KAMORTA' கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், இலங்கை கடற்படை கப்பல்கள் சமுதுராவுடன் கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (ஜூன் 23, 2024) தீவை விட்டு புறப்பட்டது. குறித்த கப்பலுக்கு, திருகோணமலை துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.