நிகழ்வு-செய்தி

மேற்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க பதவியேற்றார்

மேற்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க இன்று (2024 ஜூலை 12,) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

12 Jul 2024

துருக்கி குடியரசின் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு வெளியேறியது

உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2024 ஜூலை மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு வந்த துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல், இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு கடற்படைப் பயிற்சியின் பின்னர் குறித்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை செய்தனர்.

12 Jul 2024

கடற்படையின் இரத்த தான திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி இன்று (2024 ஜூலை 12,) வடமேற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

12 Jul 2024