நிகழ்வு-செய்தி
வெலிசர கடற்படை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை திருமண வீடமைப்பு கட்டிடம் கடற்படை தளபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது
கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், வெலிசர கடற்படை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை திருமண வீடுகள் கட்டிடம் இன்று (2024 ஆகஸ்ட் 23) கடற்படை வீரர்களின் பயன்பாட்டிற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் வெலிசர கடற்படை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
23 Aug 2024
கிழக்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கடமைகளை பொறுப்பேற்றார்
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2024 ஆகஸ்ட் 23) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
23 Aug 2024
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Stockdale’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது
2024 ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி தனது விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Stockdale’ கப்பல், அதன் விநியோகம் மற்றும் சேவைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (2024 ஆகஸ்ட் 23) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
23 Aug 2024


