நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரைச் சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சு செயலகத்தில் இன்று (2024 ஒக்டோபர் 02) பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக கடமையாற்றும் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தாவை (ஓய்வு) உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

02 Oct 2024

ஒருங்கிணைந்த கடல்சார் படையணியின் 154 கூட்டு பணிக்குழுவின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

பஹ்ரைனில் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய கடல்சார் கூட்டணியாகக் கருதப்படும், ஒருங்கிணைந்த கடல்சார் படையணியின் (Combined Maritime Force - CMF) கீழ் செயல்படும் 154 வது கூட்டுப் பணிக்குழுவின் தற்போதைய கட்டளை அதிகாரியான கொமடோர் Haytham Elsayed Khalil உட்பட குழுவினர். இன்று (அக்டோபர் 02, 2024) அதிகாரப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்ததுடன் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 154 ஆவது கூட்டுப் பணிக்குழுவின் கட்டளையை இலங்கை கடற்படை பொறுப்பேற்க உள்ளது.

02 Oct 2024