நிகழ்வு-செய்தி

கடற்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினரின் நட்புறவு சந்திப்பு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், கடற்படையினர் சமய மற்றும் கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர், மேலும் அந்த நிகழ்ச்சித் தொடரில் கடற்படையினரின் நட்புறவு சந்திப்பு இன்று (2024 நவம்பர் 09,) வெலிசர கடற்படை வளாகத்தில் அமைந்துள்ள Wave N’ Lake கடற்படை அரங்கில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

09 Nov 2024

ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கடற்படையின் புதிய பதில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் புதிய பதில் தலைமை அதிகாரியாக 2024 நவம்பர் 09 ஆம் திகதி முதல், ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டதுடன் கடற்படைத் தளபதி அவர்கள் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

09 Nov 2024

ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

இலங்கை கடற்படையில் 34 வருட சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க இன்று (2024 நவம்பர் 09) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

09 Nov 2024

இலங்கை கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கை கடலோரக் காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட, ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க இன்று (2024 நவம்பர் 05) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

09 Nov 2024