நிகழ்வு-செய்தி
USS Michael Murphy' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது
வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 2024 நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவையை பூர்த்தி செய்த பின்னர், இன்று (2024 நவம்பர் 17,) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன், கடற்படையின் மரபுப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை வழங்கினர்.
17 Nov 2024
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 நவம்பர் 17) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
17 Nov 2024


