நிகழ்வு-செய்தி

கடற்படை சமூக நலத் திட்டம் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைக்கும் நிகழ்வு தொடங்கியது

அனுராதபுரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் 2024 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கை கடற்படையால் திறந்து வைக்கப்பட்டன. அனுராதபுரம் நாச்சாதூவ முஸ்லிம் மகா வித்தியாலயம், மத்திய நுவர கம்பலாத பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழுகொல்லேவ பாலர் பாடசாலை மற்றும் மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ரந்துவ மீனவர் சங்க மண்டபம் ஆகிய இடங்களில் இந்த புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டன. இந்த நிகழ்வு அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் 31 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

03 Dec 2024

74 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இந்து மத நிகழ்ச்சி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது

2024 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் மத நிகழ்ச்சிகளின் இந்து மத நிகழ்ச்சி இன்று (2024 டிசம்பர் 02) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் இந்து ஆலயத்தில் இடம்பெற்றது.

03 Dec 2024