நிகழ்வு-செய்தி

கடற்படை சமூக நலத் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 04 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன

ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு மற்றும் கடற்படை சமூக நலத் திட்டத்தினால் நிர்மானிக்கப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் நிறுவும் விசேட திட்டத்தின் கீழ், கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவில் ஜனசிரிகம கிராமம், ஹிகுருவெவகம கிராமம் , 21 கொலனியில் மேற்கு தக்க்ஷிலா கல்லுரி மற்றும் மஹகஸ்வெவ கல்லுரி ஆகியவற்றில் நிறுவப்பட்ட நான்கு (04) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 டிசம்பர் 04 ஆம் திகதி பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

04 Dec 2024

கடற்படை மூலம் பல் சிகிச்சை முகாமொன்று நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவை, கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் Good Neighbours Foundation (Guarantee) Limited நிருவனம் இணைந்து கடற்படை சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்படுகின்ற பல் சிகிச்சை முகாமின் முதல் கட்டம் 2024 நவம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் கருவலகஸ்வெவ மற்றும் ரொட்டவெவ பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.

04 Dec 2024