நிகழ்வு-செய்தி

கடற்படை சமூக நலத் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன

ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு மற்றும் கடற்படை சமூக நலத் திட்டத்தினால் நிர்மானிக்கப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் நிறுவும் விசேட திட்டத்தின் கீழ், ஹொரொவ்பதான பிரதேச செயலகப் பிரிவின் கம்மஹெகெவெவ ஸ்ரீ போத்திருக்காராம விஹாரயத்தில் மற்றும் பதவிய அருணகம ஸ்ரீ ஷைலத்தலாராம விஹாரயத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 டிசம்பர் 05 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

05 Dec 2024

கடற்படை மூலம் பல் சிகிச்சை முகாமொன்று நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவை, கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் Good Neighbours Foundation (Guarantee) Limited நிருவனம் இணைந்து கடற்படை சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட பல் சிகிச்சை முகாமின் இரண்டாவது கட்டம் மாத்தரை, தலஹிடியாகொட மற்றும் தேவாலேகம பகுதிகளில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவாவின் தலைமையில் 2024 டிசம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.

05 Dec 2024