நிகழ்வு-செய்தி

ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் Hemodialysis பிரிவுக்கான மருத்துவ தர மறுமலர்ச்சி இயந்திரத்தை கடற்படை நிறுவியுள்ளது

சுகாதார அமைச்சின் முன்முயற்சி மற்றும் இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மருத்துவ தர மறுமலர்ச்சி இயந்திரம் ஒன்று (01) இன்று (2025 பெப்ரவரி 01) ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் hemodialysis பிரிவில் நிறுவப்பட்டது.

01 Feb 2025

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI BUNG TOMO - 357' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டுச் சென்றது

2025 ஜனவரி 31 அன்று விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய கடற்படையின் Multirole Light Frigate ரக 'KRI BUNG TOMO - 357' போர்க்கப்பலானது, அதன் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று (2025 பெப்ரவரி 01) தீவை விட்டு வெளியேறுகிறது. மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

01 Feb 2025

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் 'PNS ASLAT' உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ‘PNS ASLAT’ இன்று (2025 பெப்ரவரி 01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, மேலும் கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படை கப்பலை வரவேற்றது.

01 Feb 2025