நிகழ்வு-செய்தி
77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்றது

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆயுதப்படைகளின் தலைவரும் ஜனாதிபதியுமான திரு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில், "தேசிய மறுமலர்ச்சிக்காக இணைவோம்" என்ற தொனிப்பொருளில், 77வது தேசிய சுதந்திரத்திற்காக இலங்கை கடற்படை இன்று காலை (2025 பெப்ரவரி 04,) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இராணுவத்தினர் பெருமிதத்துடன் கலந்துகொண்டனர்.
04 Feb 2025
பெருமைமிக்க 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தேசத்தை கௌரவிக்கும் வகையில் கடற்படையினரால் 25 துப்பாக்கி சூட்டு வணக்கம் செலுத்தப்பட்டது

'தேசிய மறுமலர்ச்சிக்காக இணை வோம்' என்ற தொனிப்பொருளில் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையினர் 25 தடவைகள் துப்பாக்கி சூட்டு வணக்கங்கள் செலுத்தி நாட்டுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில், இன்று (2025 பெப்ரவரி 04) மதியம் 1200 மணி அளவில் சயுர கப்பலின் கட்டளை அதிகாரி,கெப்டன் சந்தன பிரியந்தவினால் வழிநடத்தப்பட்டது.
04 Feb 2025
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான KRI DIPONEGORO - 365 என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான 'KRI DIPONEGORO - 365' என்ற போர்க்கப்பல் இன்று (2025 பெப்ரவரி 04,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.
04 Feb 2025
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'PNS ASLAT' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டு புறப்பட்டது

2025 பெப்ரவரி 01 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படையின் 'PNS ASLAT’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (2025 பெப்ரவரி 04,) இலங்கையை விட்டு வெளியேறியதுடன், கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
04 Feb 2025
இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் கடற்படை தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான தென் கொரியாவின் தூதுவர் திருமதி மியோன் லீ (Miyon LEE), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 பெப்ரவரி 03 அன்று கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
04 Feb 2025