நிகழ்வு-செய்தி

"அமான் - 2025" பலதரப்பு பயிற்சி ஆரம்பமாகிறது

பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு பயிற்சியான AMAN-2025 இன் தொடக்க விழா இன்று (2025 பெப்ரவரி 07) பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கடற்படைத் துறைமுக வளாகத்தில் நடைபெற்றதுடன், இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகு கப்பலின் தளபதி மற்றும் ஏனைய கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

07 Feb 2025

இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான ‘ANTONIO MARCEGLIA’ வெற்றிகரமான கூட்டு கடற்படை பயிற்சியின் பின் புறப்பட்டது

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 05 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இத்தாலிய கடற்படையின் 'ANTONIO MARCEGLIA' என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இலங்கை கடற்படை கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2025 பெப்ரவரி 07) இலங்கையை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை முறைப்படி கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்

07 Feb 2025

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கெப்டன் YUKI YOKOHARI, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 பெப்ரவரி 07 அன்று உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

07 Feb 2025