நிகழ்வு-செய்தி
"அமான் - 2025" என்ற பலதரப்பு பயிற்சியில் கலந்து கொண்ட விஜயபாகு கப்பலானது இலங்கையை வந்தடைந்தது
பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்திருந்த (AMAN-2025) பலதரப்பு பயிற்சியில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபாகு கப்பல், குறித்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று (2025 பெப்ரவரி 17) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அங்கு கடற்படை மரபுப்படி விஜயபாகு கப்பலை வரவேற்க கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.
17 Feb 2025
இந்தியாவின் புதுதில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையிள் கடற்படை தளபதியை சந்தித்தார்
இந்தியாவின் புதுதில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் மற்றும் இலங்கையிலும் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் கர்னல் Avihay Zafrany இன்று (2025 பெப்ரவரி 17) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகோடாவைச் சந்தித்தார்.
17 Feb 2025
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI BUNG TOMO - 357' நட்புரீதியான விஜயத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு இலங்கையை விட்டுப் புறப்பட்டது
2025 பெப்ரவரி 16 ஆம் திகதி நட்புரீதியான விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BUNG TOMO - 357' என்ற போர்க்கப்பல், விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, இன்று (2025 பெப்ரவரி 17) இலங்கையில் இருந்து புறப்பட்டதுடன், குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை முறைப்படி கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்.
17 Feb 2025


