நிகழ்வு-செய்தி

சர்வதேச இராணுவ விளையாட்டு சபையின் நினைவு தின வீதி ஓட்டம் - 2025 ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் நடைபெற்றது

சர்வதேச இராணுவ விளையாட்டு சபை தினக் (Council International Military Sports-CISM) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தலைமையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்துவின் பங்குபற்றுதலுடன் சர்வதேச இராணுவ விளையாட்டு சபை தின கொண்டாட்ட வீதி ஓட்டம் - (2025 பெப்ரவரி 18) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பாராளுமன்ற மைதானத்தில் இருந்து அக்குரேகொட முப்படைத் தலைமையகம் வரை நடைபெற்றது.

18 Feb 2025

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை வலுப்படுத்துவதற்காக ஆழமற்ற நீரில் அளவிடும் கருவியொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியது

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை அபிவிருத்தி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், நவீன ஆழமற்ற நீர் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் Shallow Water Multi-Beam Echo Sounder இயந்திரத்தை இலங்கை கடற்படை நீர்வரைவியல் சேவைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வானது, இன்று (2025 பெப்ரவரி 18) கொழும்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவன வளாகத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ. Paul Stephens மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோரின் தலைமையில் நடைப்பெற்றது.

18 Feb 2025