நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பயிற்சி மாலுமிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடன் உரையாடினார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள் 2025 மார்ச் 8 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதுடன் இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாலுமிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடன் உரையாற்றினார். கடற்படைத் தளபதி அவர்கள் கடற்படையின் பணிகளையும் கடமைகளையும் மேற்கொள்வதற்குத் தேவையான அறிவு மற்றும் உடல் மற்றும் மனத் தகுதியுடன் கூடிய பயிற்சி மாலுமியாகப் பயிற்சி பெறுவதற்கான பொறுப்பை பயிற்சி மாலுமிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு வலியுறுத்தினார்.

09 Mar 2025

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) 02 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்தார்

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) 2025 மார்ச் 09 இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் (Manual Treadmill) 24 மணிநேரம் தொடர்ந்து நடந்து இரண்டு (02) உலக கின்னஸ் சாதனைகளைப் படைப்பதற்கு தகுதி பெற்றார்.

09 Mar 2025