நிகழ்வு-செய்தி

முல்லைத்தீவு திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் முல்லைத்தீவு திருமுறிகண்டி இந்து வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

10 Mar 2025

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன

2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு வர கடற்படை கப்பல்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பெருவிழாவை வெற்றிகரமாக நடாத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

10 Mar 2025