நிகழ்வு-செய்தி
சர்வதேச மகளிர் தினத்திற்காக "உங்கள் மகிழ்ச்சி உங்களுடன்" என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மார்ச் 08 ஆம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, "உங்கள் மகிழ்ச்சி உங்களுடன்" என்ற தலைப்பில் கனிஷ்ட பெண் மாலுமிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மார்ச் 11 ஆம் திகதி 2025 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆடிட்டோரியத்தில் கடற்படையின் துணைத் தலைமைத் தளபதி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.
11 Mar 2025
நிகவெரட்டிய கடகமுவ, நீர்த்தேக்கத்தில் உள்ள மதகினை சீர்செய்வதற்கு கடற்படையின் சுழியோடி பங்களிப்பு
செயலற்ற நிலையில் இருந்த நிகவெரட்டிய கடகமுவ நீர்த்தேக்கத்தின் வான் மதகைச் சரிசெய்து அதனை மீண்டும் செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2025 மார்ச் 10 ஆம் திகதி சுழியோடி ஆதரவினை வழங்க கடற்படையினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
11 Mar 2025
அனுராதபுரம், ஹபரண மகா வித்தியாலயத்தை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றியமைப்பதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு
"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் அனுராதபுரம், ஹபரண மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகள் 2025 மார்ச் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
11 Mar 2025
இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் இலங்கை கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்
இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் கௌரவ மேஜர் ஜெனரல் Faheem-Ul-Aziz (ஓய்வு) இன்று (2025 மார்ச் 11) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவைச் சந்தித்தார்.
11 Mar 2025
கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட LINE THROWING ADAPTER என்ற கருவியை செயல்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டனர்
இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் (Research and Development Unit - RDU) மூலம் T 56 தயாரிக்கப்பட்ட Line Throwing Adapter கருவியை 2025 மார்ச் 04 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் இலங்கை கடற்படைக் கப்பல்களான சயூர மற்றும் சக்தி ஆகிய கப்பல்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
11 Mar 2025


