நிகழ்வு-செய்தி

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான 'PROVENCE' என்ற கப்பல் தீவை விட்டு வெளியேறியது

2025 மார்ச் 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கைக்கு வந்த பிரான்சிய கடற்படையின் ‘PROVENCE’ என்ற கப்பல் 2025 மார்ச் 19 ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை முறைப்படி கொழும்பு துறைமுகதில் கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்.

20 Mar 2025

கல்கமுவ மெதின்னொருவ கனிஷ்ட வித்தியாலயத்தை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் கல்கமுவ மெதின்னோருவ கனிஷ்ட வித்தியால வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

20 Mar 2025

பிரான்ஸின் இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டுப் படையின் கட்டளைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

பிரான்ஸின் இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டுப் படையின் கட்டளைத் தளபதி (French Joint Forces Commander in the Indian Ocean) Rear Admiral Hugues LAINE உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக 2025 மார்ச் 19 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தார்.

20 Mar 2025