நிகழ்வு-செய்தி

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் (INDOPACOM) கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பப்பாரோ உள்ளிட்ட தூதுவர்கள் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2025 மார்ச் 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தனர்.

21 Mar 2025

பாடசாலை வளாகத்தை "மகிழ்ச்சியான பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற என்ற கருப்பொருளின் அடிப்படையில் தேசிய விழுமியங்கள் மற்றும் சமூக விழுமியங்களை வளர்க்கும் சூழல் நட்பு கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய திட்டத்தின் கீழ், கடவத்தை பௌத்த ஆரம்பப் பள்ளி, கடவத்தை ஸ்ரீ பிரேமானந்த மகா வித்யாலயம், இம்புல்கொட பரகந்தெனிய மாயாதுன்ன ஆரம்பப் பள்ளி மற்றும் வெலிவேரிய எம்பரலுவ மிஹிது கனிஷ்ட வித்யாலயம் ஆகிய கவர்ச்சிகரமான வளாகங்களுக்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு 2025 மார்ச் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

21 Mar 2025

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலத்தை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியால வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

21 Mar 2025

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 19வது பாடநெறியின் மாணவச் சிப்பாய் அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொண்டனர்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷாந்த ஹெவகே தலைமையில் 19 ஆவது பணியாளர் பாடநெறியைச் சேர்ந்த 190 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவச் சிப்பாய் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று மேற்கு கடற்படை கட்டளையின் ஆய்வு விஜயத்தில் 2025 மார்ச் 17 அன்று ஈடப்பட்டதுடன், மேலும் இந்த குழுவினரை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு அந்த கட்டளையின் செயல்பாட்டு பணிக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர்.

21 Mar 2025