நிகழ்வு-செய்தி
யாழ்ப்பாணம், பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படையினர் ஆதரவளித்தனர்
யாழ்ப்பாணம் பாலைத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா 2025 மார்ச் மாதம் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் மிக விமர்சையாக நடாத்தப்பட்டதுடன், இவ்விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்புகளை நிறுவுவதற்கான பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
24 Mar 2025
கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்
கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி, கொமடோ ரோஜர் வோட் (commodore Rodger ward) மற்றும் படையின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று 2025 மார்ச் 22 முதல் 26 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், இதற்கு இணையாக, இந்தக் குழு இன்று (2025 மார்ச் 24) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தது.
24 Mar 2025
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்புத் திட்டத்தின் கீழ் கடற்படையால் நடத்தப்படும் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நடைப்பெற்றது
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத்தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல்களிற்குள் நுழைதல், தேடல் மற்றும் கைப்பற்றும் உத்திகள் தொடர்பான பிராந்திய ஆலோசனை பாடநெறி மற்றும் பிராந்திய கடல்சார் சட்ட அமலாக்க ஆலோசனைப் பாடநெறி ஆகியவை திருகோணமலை சிறப்புப் படகுகள் படைப்பிரிவில் சிறப்பாக நடைபெற்றதுடன். சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வினை 2025 மார்ச் 20 அன்று திருகோணமலை Sober Island Resort இல் நடத்த கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
24 Mar 2025
36வது கனிஷ்ட கடற்படை பணியாளர் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் நடைப்பெற்றது
திருகோணமலை கடல் மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் நடைபெற்ற 36 ஆவது கனிஷ்ட கடற்படைப் பணியாளர் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன் அதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையில் மற்றும் கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2025 மார்ச் 22 அன்று கடல் மற்றும் கடல்சார் கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
24 Mar 2025


