சிங்கப்பூரின் செங்கி (Changi) கண்காட்சி மையத்தில் 2025 மே 6 முதல் 8 வரை வெற்றிகரமாக நடைபெற்ற ‘IMDEX Asia – 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 9வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர இன்று (2025 மே 15) நாட்டை வந்தடைந்ததுடன் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரால் அந்தக் கப்பலுக்கு கடற்படை மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.