நிகழ்வு-செய்தி

சமய மரபுளுக்கு முன்னுரிமை கொடுத்து கடற்படையினர் வெசாக் பண்டிகையை கொண்டாடினர்

2025 மே 12 ஆம் திகதி வெசாக் பண்டிகையை முன்னிட்டு, கடற்படை பௌத்த சங்கத்தின் தலைமையில், இலங்கை கடற்படை, ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். நுவரெலியா நகரை மையமாகக் கொண்டு நடைபெறும் அரச வெசாக் விழா, கொழும்பு பௌத்தாலோக வெசாக் வலயம் மற்றும் புத்த ரஷ்மி வெசாக் வலயம் ஆகியவற்றிற்கு கடற்படையினர் பங்குபற்றினர்.

16 May 2025

அமெரிக்க எரிசக்தித் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு அணு மற்றும் கதிரியக்கப் பொருட்களை கண்டறியும் உபகரணங்கள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படைக்குள் நிறுவப்பட்ட இரசாயணவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பிரிவுகளால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்குத் தேவையான அணு மற்றும் கதிரியக்கப் பொருள் கண்டறிதல் உபகரணங்களை கடற்படைத் தளபதியிடம் ஒப்படைத்தல் இன்று (2025 மே 15) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சாங் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

16 May 2025

GALLE DIALOGUE 2025 அதிகாரப்பூர்வ வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது

‘Maritime outlook of the Indian ocean under changing dynamics’ என்ற கருப்பொருளின் கீழ், இலங்கை கடற்படை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த GALLE DIALOGUE 2025 சர்வதேச கடல்சார் மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம், கடற்படைத் தளபதி அவர்களால் இன்று (2025 மே 15) கடற்படைத் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

16 May 2025

கொழும்பில் ஆரம்பித்த கூட்டு சர்வதேச மாநாட்டில் கடற்படைத் தளபதி சிறப்புரையை நிகழ்த்தினார்

தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் (Institute of National Security Studies - INSS), Consortium of South Asian Think Tanks (COSATT) மற்றும் Konrad-Adenauer-Stiftung (KAS) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு சர்வதேச மாநாடு இன்று (2025 மே 15) கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்த மாநாட்டின் சிறப்புரையை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள் நிகழ்த்தினார்.

16 May 2025