நிகழ்வு-செய்தி

திருகோணமலை புறா தீவைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறை சுற்றுச்சூழல் கட்டமைப்பை சுத்தம் செய்வதற்காக கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

திருகோணமலை புறாத் தீவைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறை சுற்றுச்சூழல் கட்டமைப்பின் பல்லுயிர் பெருக்கத்திற்கு சேதம் விளைவிக்கும் மீன்பிடி வலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் உள்ளிட்ட குப்பைகளை பவளப்பாறைகளிலிருந்து அகற்றும் திட்டம் உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, தூய்மை இலங்கை செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், 2025 ஜூன் 02, அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், கடற்படை சுழியோடிகளினால் இத்திட்டமானது மேற்கொள்ளப்பட்டது.

04 Jun 2025

ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கௌரவ ரிச்சர்ட் மார்ல்ஸ் கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கௌரவ ரிச்சர்ட் மால்ஸ் உள்ளிட்ட ஆஸ்திரேலியக் குழு, 2025 ஜூன் 03 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்ர்.

04 Jun 2025