நிகழ்வு-செய்தி
கடற்படை வீரர்களுக்கு உள்நாட்டு விவகாரப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது
இலங்கை கடற்படைக்குள் நிறுவப்பட்ட உள்நாட்டு விவகாரப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்த விரிவுரையொன்று, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால், 2025 ஜூன் 11 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
13 Jun 2025
கடற்படை இரத்ததானம் செய்யும் சமூகப்பணியில் ஈடுபட்டது
இலங்கை கடற்படையால் சமூக சேவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு இரத்த தான நிகழ்வானது 2025 ஜூன் 11 ஆம் திகதி பூஸ்சவில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் நிபுன நிறுவனத்தின் கடற்படை மருத்துவமனை வளாகத்திலும், யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் காஞ்சதேவ நிறுவன வளாகத்திலும் வெற்றிகரமாக நடைபெற்றது.
13 Jun 2025
இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை தன்வசப்படுத்தியதை உறுதிப்படுத்திய ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) அவர்களுக்கு கடற்படைத் தளபதியின் பாராட்டுக்கள்
ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) 2025 மார்ச் 09 ஆம் திகதி இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் (Manual Treadmill) 24 மணிநேரம் தொடர்ந்து நடந்து இரண்டு (02) உலக கின்னஸ் சாதனைகளைப் நிகழ்த்தியதுடன். அந்த கின்னஸ் உலக சாதனைக்கான உத்தியோகப்பூர்வ அங்கீகாரத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் இலங்’கை கடற்படைக்கு கௌரவத்தையும் அபிமானத்தையும் பெற்றக் கொடுத்த்தனால் 2025 ஜூன் 12 ஆம் திகதி கடற்படைத் தளபதி தனது பாராட்டுகளை இலங்கை கடற்படை சார்பாக தெரிவித்தார்.
13 Jun 2025


