இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 258வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த முன்னூற்று அறுபத்தெட்டு (368) நிரந்தர பயிற்சி மாலுமிகள் மற்றும் நாற்பத்திரண்டு (42) தன்னார்வ பயிற்சி மாலுமிகள் அடங்கிய நானூற்று பத்து (410) மாலுமிகள், தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, 2025 ஜூலை 18அன்று பூஸ்ஸவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர். இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தின் தளபதி மற்றும் கட்டளை அதிகாரி கடற்படையின் துணைத் தலைமைத் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளை மற்றும் இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா, வெளியேறிச் செல்லும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.