நிகழ்வு-செய்தி
“க்லீன் ஶ்ரீ லங்கா சைக்கிள் சவாரியில்” கடற்படை இணைகிறது
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணைந்து, பொதுமக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் கீழ் விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு வாரம், 2025 ஜூலை 26 அன்று தொடங்கியதுடன் அதனுடன் இணைந்து, அதன் முதல் கட்டமாக அன்றைய தினம் க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய சைக்கிள் சவாரி வெற்றிகரமாக நடைபெற்றது.
28 Jul 2025
கடற்படையின் இரத்த தானத்திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 ஜூலை 26 ஆம் திகதி வடமேற்கு கடற்படைக் கட்டளை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
28 Jul 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவின் மஹாரகம, எதிலிவெவ மற்றும் கோனகங்னார பகுதிகளில் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் மற்றும் அவுட்ரீச் ப்ராஜெக்ட்ஸ் (கெரென்டி) லிமிடெட்டின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட இரண்டு (02) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஜூலை 24 அன்று பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.
28 Jul 2025
இலங்கை கடற்படையானது விமானப்படையுடன் இணைந்து கடற்படையின் கடல்சார் செயற்பாட்டுச் சிறப்பினை வெளிப்படுத்தி திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2025 (TRINEX - 25) ஆனது வெற்றிகரமாக நிறைவடைந்தது
‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2025’ (TRINEX - 25) ஜூலை 22 முதல் 26 வரை திருகோணமலை துறைமுகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை கடல் பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின் நிறைவு விழா 2025 ஜூலை 27 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையில் இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரலவில் நடைபெற்றது.
28 Jul 2025


