நிகழ்வு-செய்தி
இலங்கை-இந்தியா இருதரப்பு கடற்படைப் பயிற்சி (SLINEX-25) கொழும்பில் ஆரம்பமாகியது
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பன்னிரண்டாவது (12) இருதரப்பு கடற்படைப் பயிற்சி (SLINEX - 25) இன்று (2025ஆகஸ்ட் 14) கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகுவில், இலங்கைக்கான துணை இந்திய உயர் ஸ்தானிகர் Dr. Satyanjal Pandey அவர்களின் தலைமையிலும், கடற்படையின் இயக்குநர் ஜெனரல் செயல்பாடு ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களின் பங்கேற்பிலும் தொடங்கப்பட்டது.
14 Aug 2025
SLINEX - 25வது இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ‘INS Jyoti’ மற்றும் ‘INS Rana’ ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பன்னிரண்டாவது (12வது) இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் (SLINEX – 25) பங்கேற்க இந்திய கடற்படைக் கப்பல்களான ‘INS Jyoti’ மற்றும் ‘INS Rana’ ஆகிய கப்பல்கள் இன்று (2025 ஆகஸ்ட் 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன, மேலும் இலங்கை கடற்படையினரால் கப்பல்கள் கடற்படை மரபுகளின்படி வரவேற்கப்பட்டன.
14 Aug 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத் தி ன் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கெகிராவ பிரதேச செயலகத்தில் உள்ள ஒலுகரந்த கிராமத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் 2025 ஆகஸ்ட் 13 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
14 Aug 2025
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிமல் ரணசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றார்
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நிமல் ரணசிங்க, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக 2025 ஆகஸ்ட் 13 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
14 Aug 2025
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய விடைபெற்றுச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் Colonel Darren Woods மற்றும் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள Colonel Keith Miles ஆகியோர் 2025 ஆகஸ்ட் 13 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தனர்.
14 Aug 2025
இலங்கைக்கான இந்தோனேசிய குடியரசின் தூதர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதர் கௌரவ Dewi Gustina Tobing அவர்கள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 ஆகஸ்ட் 13 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.
14 Aug 2025


