நிகழ்வு-செய்தி

விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த 37 கடற்படை வீரர்களுக்கு சின்னங்கள் வழங்கப்பட்டது

கடற்படை விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் இருபத்தி ஒன்பதாவது (29) தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த மூன்று (03) அதிகாரிகள் மற்றும் முப்பத்து நான்கு (34) மாலுமிகளுக்கு சின்னங்கள் வழங்கும் நிகழ்வு புத்தளம் கங்கேவாடிய விரைவு நடவடிக்கை படகுகள் படைத் தலைமையகத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் 2025 செப்டெம்பர் 06 வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி கெப்டன் சுதேஷ் சிந்தக மற்றும் வடமேற்கு கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் வருண பெர்டினாண்ட்ஸ் அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

07 Sep 2025