இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 260வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த இருநூற்று எழுபத்து மூன்று (273) நிரந்தர பயிற்சி மாலுமிகள் மற்றும் முப்பத்து மூன்று (33) தன்னார்வ பயிற்சி மாலுமிகள் அடங்கிய முந்நூற்று ஆறு (306) மாலுமிகள், தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, 2025 செப்டம்பர் 13 ஆம் திகதி அன்று புனேவையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர். இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் தளபதி மற்றும் கட்டளை அதிகாரி கெப்டன் லக்ஷ்மன் அமரசிங்கவின் அழைப்பின் பேரில், விநியோகம் மற்றும் சேவை இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில,வெளியேறிச் செல்லும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.