நிகழ்வு-செய்தி

‘சயுருசர’ சஞ்சிகையின் 49வது இதழின் வெற்றியாளர்களுக்கு கடற்படைத் தளபதி பாராட்டு தெரிவித்தார்

கடற்படை ஊடக இயக்குநர் காரியாலயத்தால் வெளியிடப்பட்ட ‘சயுருசர’ சஞ்சிகையின் 49வது இதழில் படைப்பு கவிதைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை சமர்ப்பித்த கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விருதுகளை வென்றவர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இன்று (2025 அக்டோபர் 08) கடற்படை தலைமையகத்தில் பணப் பரிசுகளை வழங்கினார்.

08 Oct 2025

இலங்கை கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரையாற்றினார்

இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு இன்று (அக்டோபர் 7) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேட்கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அங்கு கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தினார்.

08 Oct 2025

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு வலுவான கூட்டுத் திட்டத்திற்காக கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடமேற்கு மாகாண மீனவ சமூகம் இணைந்து செயல்படுகின்றது

வடமேற்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழலில் ஏற்படும் பாதகமான தாக்கம் மற்றும் கடல் வழிகளில் நடைபெறும் கடத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி, வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், மாகாணத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சட்ட அமலாக்க முகவர்கள் மற்றும் வடமேற்கு மாகாண மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன், 2025 அக்டோபர் 02 அன்று நடைபெற்றது.

08 Oct 2025

கடல்சார் மற்றும் கடலோரப் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதில் கடற்படை முன்னிலை வகிக்கிறது

கிழக்கு மாகாணத்தில் கடல்சார் மற்றும் கடலோரப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு கூட்டு அணுகுமுறை மூலம் தீர்வு காண தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான சிறப்பு கலந்துரையாடல், திருகோணமலை கடற்படை கப்பல்துறையில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசு நிறுவனங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் 2025 அக்டோபர் 02 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

08 Oct 2025