நிகழ்வு-செய்தி
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவுக்கு வருகை தந்தது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' இன்று (2025 அக்டோபர் 28,) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
28 Oct 2025
வவுனியாவில் கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காமினி தேசிய பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் (01) 2025 அக்டோபர் 27 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
28 Oct 2025
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை அங்கீகரிப்பதற்காக வடக்கு கடற்படை கட்டளை ஜனாதிபதி சுற்றுச்சூழல் வெள்ளி விருதைப் பெற்றது
மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 11வது ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழா - 2025, 2025 அக்டோபர் 23 ஆம் திகதி கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது, மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அரசு நிறுவனங்கள் பிரிவில் ஜனாதிபதி வெள்ளி விருது வடக்கு கடற்படை கட்டளைக்கு வழங்கப்பட்டது.
28 Oct 2025
இரசாயணவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெறுகின்றது
NAVSTRAT-2030 இரசாயணவியல் திட்டத்திற்கு இணங்க உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு திட்டம், ‘Developing Capabilities of CBRN First Response,” என்ற கருப்பொருளின் கீழ் கடற்படை பொறியியல் துறை 2025 அக்டோபர் 22 முதல் 23 வரை கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.
28 Oct 2025
தனமல்வில கிதுல்கோட்டையில் உள்ள ரதண தஹம் தியான மையத்தின் வருடாந்திர கடின புண்ய மஹோற்சவம் கடற்படையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது
தனமல்வில, கிதுல்கோட்டையில் உள்ள ரதண தஹம் தியான மையத்தின் வருடாந்திர கடின புண்ய மஹோற்சவம் 2025 அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படை மற்றும் கடற்படை பௌத்த சங்கத்தின் பங்களிபுடன் நடைபெற்றது.
28 Oct 2025
மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்தது
மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ இன்று (2025 அக்டோபர் 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலை வரவேற்றனர்.
28 Oct 2025


