கடல் சூழலில் நிலையான மீன்வளம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்கான கூட்டு அணுகுமுறைக்காக; வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னியில், 2025 நவம்பர் 11 ஆம் திகதி வடமேற்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்கள், மீன்வள மற்றும் நீர்வளத் துறை, இலங்கை பொலிஸ் துறை, சுங்கத் துறை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறை, மத்திய சுற்றுச்சூழல் ஆணையம், வனப் பாதுகாப்புத் துறை மற்றும் வடமேற்கு மாகாண மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன், குறிப்பிட்ட பொருள் சார்ந்த யோசனைகள், திட்டங்கள் குறித்த அமர்வு நடைபெற்றது.