நிகழ்வு-செய்தி
சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பு 2025 இல் பங்கேற்க வெளிநாட்டு போர்க்கப்பல்கள் தீவுக்கு வருகின்றன
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த ஏழு (07) போர்க்கப்பல்களின் பங்கேற்புடன், 2025 நவம்பர் 30 ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறும் சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்க, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று (03) போர்க்கப்பல்கள் 2025 நவம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தீவை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி போர்க்கப்பல்களை இலங்கை கடற்படை வரவேற்றது.
26 Nov 2025
75வது கடற்படை தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலில் கடற்படைக்கு ஆசிர்வாதம் வேண்டி இந்து மத நிகழ்ச்சி நடைபெற்றது
2025 டிசம்பர் 9ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிகு 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வாதம் பெறுவதற்கான தொடர் மத நிகழ்ச்சிகள், 2025 நவம்பர் 23 ஆம் திகதி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவனேஸ்வரம் இந்து கோவிலில் நடைபெற்றது.
26 Nov 2025
கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமானது பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் நுவரகம கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குடாவெவ புதிய கிராமத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு (01) நிலையமொன்று 2025 நவம்பர் 21 ஆம் திகதி அன்று பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.
26 Nov 2025
கடற்படை பேச்சுப் போட்டி மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவு கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படை ஆராய்ச்சிப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை (Public Speaking Competition - 2025) - 2025 இல் நடைபெற்ற அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவு கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்குதல், இந்த நிகழ்வு 2025 நவம்பர் 20 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பி.ஜே.பி. மாரபே பிரதம விருந்தினராகவும், மறைந்த அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவின் மனைவி திருமதி மோனிகா பெர்னாண்டோ கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
26 Nov 2025


