நிகழ்வு-செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க கடற்படை உதவுகிறது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக முழு தீவையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு திட்டத்தை கடற்படை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், நீர் வழங்கல் அமைப்புகள், மின்சார அமைப்புகள் மற்றும் பாதைகளை புணரமைத்தல், மருத்துவ சேவைகள், உலர் உணவு மற்றும் குடிநீர் வழங்குதல் ஆகியவற்றில் கடற்படையின் உதவியானது இன்று (2025 டிசம்பர் 02) வழங்கப்பட்டது.

02 Dec 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சமைத்த உணவை வழங்குவதற்காக கடற்படை சிறப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை முழு தீவையும் உள்ளடக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளதுடன், இதன் கீழ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சமைத்த உணவை வழங்குவதற்காக கடற்படையின் நடமாடும் சமையலறை மற்றும் நடமாடும் மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று (2025 டிசம்பர் 02) கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ளது.

02 Dec 2025

மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படைத் தலைவர், கடற்படை தலைமை அதிகாரியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இலங்கையில் உத்தியோகப்பூர்வ சந்திப்பை மேற்கொண்ட மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படைத் தலைவர், Ibrahim Hilmy (Chief of Defence Force of Maldives National Defence Force -MNDF), 2025 டிசம்பர் 01, கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை, உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

02 Dec 2025