நிகழ்வு-செய்தி

சீரற்ற காலநிலையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய கடற்படையின் உதவி

சீரற்ற காலநிலையின் காரணமாக சேதமடைந்த சாலைகள் மற்றும் பொது இடங்களை மீட்டெடுப்பதற்காக கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், சேதமடைந்த கண்டி-ஹந்தான சாலை மற்றும் வத்தேகம-ஹாதலே சாலை ஆகியவை இன்று (2025 டிசம்பர் 05,) கடற்படையின் பங்களிப்புடன் சரிசெய்யப்பட்டன.

05 Dec 2025

அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான 'DECISIVE' கப்பலை இலங்கை கடற்படை உத்தியோகப்பூர்வமாகப் ஏற்றுக்கொண்டது

அமெரிக்காவால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட அமெரிக்க கடலோர காவல்படையின் ‘DECISIVE’ கப்பல் (EX USCGC DECICIVE) உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வானது, அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ‘பெல்டிமோர்’ இல் அமைந்துள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் கட்டும் தளத்தில் 2025 டிசம்பர் 02, அன்று நடைபெற்றதுடன், மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இந்த நிகழ்வில் பங்கேற்றார். அதன்படி, 2025 டிசம்பர் 02, முதல் P 628 என்ற கொடி எண்ணின் கீழ் இலங்கை கடற்படையில் சேரும் இந்தக் கப்பல், அன்றைய தினம் முதல் அதன் பிரதான கம்பத்தில் இலங்கை தேசியக் கொடியை பெருமையுடன் ஏற்றும்.

05 Dec 2025

75 வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கி மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களை கடற்படை நடத்தி வருகிறது.இதன் கீழ், கடற்படையின் மற்றொரு சமூக நலத் திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வானது 2025 டிசம்பர் 02, அன்று கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையிலும் வட மத்திய கடற்படை மருத்துவமனை வளாகத்திலும் நடைபெற்றது.

05 Dec 2025