நிகழ்வு-செய்தி
இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 261 வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 432 பயிற்சி மாலுமிகள் வெளியேறிச் செல்கின்றனர்
இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 261 வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த முந்நூற்று எழுபத்தாறு (376) நிரந்தர பயிற்சி மாலுமிகள் மற்றும் ஐம்பத்தாறு (56) தன்னார்வ பயிற்சி மாலுமிகள் அடங்கிய நானூற்று முப்பத்திரண்டு (432) மாலுமிகள், தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, 2025 டிசம்பர் 06 ஆம் திகதி அன்று புனேவையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர். இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் தளபதி மற்றும் கட்டளை அதிகாரி கெப்டன் சாகர உதயங்கவின் அழைப்பின் பேரில், கடற்படை காலாட்படை தளபதி, ரியர் அட்மிரல் நிஷாந்த ரணவீர, வெளியேறிச் செல்லும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.
06 Dec 2025
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், இன்று (2025 டிசம்பர் 06) புத்தளம், அனுராதபுரம், கண்டி, நுவரெலியா, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் பங்களித்தனர்.
06 Dec 2025


