நிகழ்வு-செய்தி
கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் ஜனக குணசீல கடற்படையில் இருந்து ஓய்வு பெறுகிறார்
இலங்கை கடற்படையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் ஜனக குணசீல இன்று (2025 டிசம்பர் 18,) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
18 Dec 2025
நெங்குரம் கடற்படை சுகாதார மையத்தில் நீர் சிகிச்சை வசதிகள் திறந்து வைக்கப்பட்டனர்
வெலிசர “Anchorage” கடற்படை மறுவாழ்வு மையத்தில் போரினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் நலனுக்காக நீர் சிகிச்சை வசதிகளுக்கான அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட நீர் சிகிச்சைப் பிரிவு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில், முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) மற்றும் அட்மிரல் பிரியந்த பெரேரா (ஓய்வு) ஆகியோரின் பங்கேற்புடன் 2025 டிசம்பர் 17 திறந்து வைக்கப்பட்டது.
18 Dec 2025
கடும் வெள்ளம் காரணமாக பேராதனை கருப்பு பாலம் மற்றும் களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை கடற்படையினர் வெற்றிகரமாக முடிதனர்
"தித்வா" சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலையினால், மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது, மேலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பெரிய மரக்கட்டைகள் மற்றும் விறகுகள் உள்ளிட்ட குப்பைகள் பேராதெனியவில் உள்ள கலுபாலம் ரயில் பாலத்திலும், நில்லம்பவில் உள்ள கலுகமுவ பாலத்திலும் சிக்கி, அந்தப் பாலங்கள் வழியாக நீர் ஒழுங்காக வெளியேறுவதைத் தடுத்து, கடற்படை சுழியோடி உதவி மற்றும் அந்தப் பாலங்களை புணரமைக்க தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் 2025 டிசம்பர் 14 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
18 Dec 2025


