நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 86,800 பீடிகள் மற்றும் 1,250 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளுடன் ஒரு சந்தேக நபர் புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளார்

புத்தளம், தளுவ பகுதியில் இலங்கை கடற்படை 2026 பிப்ரவரி 12 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, எண்பத்தாறாயிரத்து எண்ணூறு (86800) பீடிகள், ஆயிரத்து இருநூற்று ஐம்பது (1250) கி கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், நூற்று முப்பத்திரண்டு (132) பதப்படுத்தப்பட்ட பீடி இலை பொதிகள், சுமார் நூற்று மூன்று (103) கிலோகிராம் நிலக்கரி மற்றும் ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்று நான்கு (1594) ஷாம்பு பாக்கெட்டுகள் மற்றும் ஒரு சந்தேக நபரை (01) ஒரு லொரியுடன் கடற்படையினர் கைப்பற்றினர்.

13 Feb 2026

ரோயல் ஓமன் கடற்படைக் கப்பல் ‘SADH’ விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு தீவிலிருந்து புறப்பட்டது

விநியோக மற்றும் சேவை தேவைகளை மேற்கொள்வதற்காக 2026 பிப்ரவரி 10 ஆம் திகதி தீவை வந்தடைந்த ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’, 2026 பிப்ரவரி 12 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அழித்தனர்.

13 Feb 2026