நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடக்கு மீனவ சமூகம் முன்னிலை வகிக்கின்றன
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழல், சுற்றுலாத் துறை மற்றும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களின் தலைமையில், அப்பகுதியில் உள்ள சட்ட அமலாக்க முகவர் மற்றும் வட மாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளின் பங்கேற்புடன், 2026 மார்ச் 10 ஆம் திகதி வடக்கு நிறுவனத்தில் சிறப்பு நிகழ்ச்சித் தொடர் ஒன்று நடைபெற்றது.
14 Mar 2026
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவியது
அம்பாறையின் பானம பகுதியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தை அன்மித்த நடமாடிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க கடற்படை, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு 2026 மார்ச் 10 ஆம் திகதி உதவி வழங்கியது.
14 Mar 2026


