நிகழ்வு-செய்தி

இந்தோனேசிய கடற்படைக் கப்பலான 'KRI BIMA SUCI - 945' நல்லெண்ணப் பயணத்திற்காக தீவிற்கு வந்தடைந்தது

ASEAN Plus Cadet Sail (APCS) – 2026 திட்டத்தின் கீழ், இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த கேடட் அதிகாரிகள் உட்பட இருபத்தாறு (26) வெளிநாடுகளைச் சேர்ந்த கேடட் அதிகாரிகளுடன், இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ‘KRI BIMA SUCI - 945’ நல்லெண்ணப் பயணத்திற்காக இன்று (2026 ஏப்ரல் 15) தீவிற்கு வந்தடைந்ததையடுத்து, கடற்படை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் அக்கப்பலை வரவேற்றனர்.

15 Apr 2026

நல்லெண்ண வருகைக்காக தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகியவை தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றன

பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக 2026 ஏப்ரல் 12 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததையடுத்து, அந்த இரு கப்பல்களின் நல்லெண்ண வருகையானது நிறைவடைந்த பின் 2026 ஏப்ரல் 13 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டன. ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய இரு கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் தனது கடற்படை மரபுகளின்படி கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் பிரியாவிடை அளித்தனர்.

15 Apr 2026