நிகழ்வு-செய்தி

தேசிய போர் வீரர்கள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் கடற்படைத் தளபதி போர் வீரர்களைச் சந்தித்தார்

மே 19 ஆம் திகதி தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இன்று (2026 மே 22) வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் (Anchorage Naval Care Center) தங்கியுள்ள கடற்படைப் போர் வீரர்களைச் சந்தித்தார்.

22 May 2026

வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தீவிற்கு வந்தடைந்த இத்தாலிய கடற்படைக் கப்பலான "ITS GIOVANNI DELLE BANDE NERE", தீவிலிருந்து புறப்படுகிறது

இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான “ITS GIOVANNI DELLE BANDE NERE”, தனது வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 21 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்துடன், அத்தேவைகளை நிறைவேற்றிய பின்னர் இன்று (2026 மே 22) தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இலங்கை கடற்படையானது, கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் “ITS GIOVANNI DELLE BANDE NERE” கப்பலுக்கு கடற்படை வழியனுப்பு விழாவை நடத்தியது.

22 May 2026

கடற்படையின் பங்கேற்புடன் கடல்சார் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டம்

2019 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் செயல்படுத்தப்பட்டு வரும் 'நீலப் பச்சை போரின்' (Green and Blue Domain) என்ற கடல்சார் சூழலமைப்பு பாதுகாப்புத் திட்டத்தின் “க்ளீன் லங்கா” (CLEAN SRI LANKA)ஒரு பகுதியாக, கடல் மற்றும் கடலோர மண்டலத்தில் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் மற்றொரு நிகழ்ச்சி, 2026 மே 19 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

22 May 2026

வெற்றித் தினத்தை முன்னிட்டு மிஹிந்து செத் மெதுரவில் போர்வீரர்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்தித்தார்

வெற்றித் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 19 மே ஆம் திகதி அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்தார்.

22 May 2026