நிகழ்வு-செய்தி

தென்கடலில் ஆபத்தில் இருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படை உதவியது

இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ஒரு கடற்படைப் படகு மூலம் அவசரமாகக் கரைக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சைக்காகக் கடற்படையால் 2026 மே 28 ஆம் திகதி அனுப்பப்பட்டார்.

29 May 2026

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசியத் திட்டத்துடன் இணைந்து, வடக்குக் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் சமூக வேளை திட்டம் கடற்படையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசியத் திட்டத்தின் கீழ், தீவைச் சுற்றியுள்ள கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற தேசியத் திட்டத்திற்கு இணங்க, வடக்கு பிராந்தியத்தைச் சுற்றியுள்ள கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் ஒரு சிறப்பு சமூக சேவை நிகழ்ச்சி, இலங்கை கடற்படையின் தீவிர பங்கேற்புடன் 2026 மே 23 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

29 May 2026