நிகழ்வு-செய்தி

வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவேந்தலின் அடையாளமாக கடற்படைச் சங்கத்தின் உறுப்பினர்கள் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலரொன்று அணிவித்தனர்

போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் பிரச்சாரத்தையொட்டி, இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு இன்று (2023 அக்டோபர் 24) கடற்படைத் தலைமையகத்தில் பொப்பி மலரொன்று அணிவித்தார்.

24 Oct 2023

252 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 523 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 252 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் நானூற்று இருபத்தி மூன்று (423) கடற்படை வீரர்கள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூறு (100) கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2023 அக்டோபர் 20 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

21 Oct 2023

ரியர் அட்மிரல் அசங்க ரணசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக தனது சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரியர் அட்மிரல் அசங்க ரணசூரிய தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 ஒக்டோபர் 20) ஓய்வு பெற்றார்.

20 Oct 2023

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Airavat’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 18 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Airavat’ கப்பல் வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 அக்டோபர் 19) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

19 Oct 2023

கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 983வது நீர் சுத்திகரிப்பு நிலையம் அனுராதபுரம் துபாராமயவில் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 983வது நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2023 ஒக்டோபர் 18) அனுராதபுரம் துபாராம வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

19 Oct 2023

இந்திய கடற்படையின் ‘INS AIRAVAT’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Airavat’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 அக்டோபர் 18) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

18 Oct 2023

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான 11வது பணியாளர் சந்திப்பு கொழும்பில் தொடங்கியது

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையில் பதினொன்றாவது (11) முறையாக நடைபெறுகின்ற பணியாளர்கள் கலந்துரையாடல் அமர்வு (11th Navy to Navy Staff Talks – Indain Navy and Sri Lanka Navy) இன்று (2023 அக்டோபர் 17) கொழும்பு கலங்கரை விளக்க உணவகத்தில் தொடங்கியதுடன் இதற்கு இணையாக இந்திய கடற்படை தூதுக்குழுவின் தளபதி ரியர் அட்மிரல் Nirbhay Bapna (Assistant Chief of Naval Staff – Foreign Cooperation and Liaison) இன்று (2023 அக்டோபர் 17) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினார்.

18 Oct 2023

இந்தியாவில் கென்ய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் உத்தியோகபூர்வ சந்திப்பு

இந்தியாவில், கென்ய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Basil Mwambingu Mwakale இன்று (2023 அக்டோபர் 17) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

18 Oct 2023

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘KRI BIMA SUCI - 945’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 14 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான BAROUE CLASS வகையின் பயிற்சிக் கப்பல் ‘KRI BIMA SUCI - 945’ வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 அக்டோபர் 15) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

16 Oct 2023

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 11 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ கப்பல் வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 அக்டோபர் 15) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது.

15 Oct 2023