நிகழ்வு-செய்தி

மடுகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் இளைஞர்களுக்கான உயிர்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சி பட்டறையொன்று கடற்படையினரால் நடத்தப்பட்டது

வவுனியா மடுகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் இளைஞர்களுக்கான உயிர்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சி பட்டறையொன்று 2024 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டது.

03 Sep 2024

கடற்படையால் தயாரிக்கப்பட்ட வேவ் ரைடர் வகையின் இரண்டு கரையோர ரோந்து படகுகள் கல்பிட்டியில் செயற்பாடு நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளது

வெலிசர கடற்படை படகுகள் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு குளிரூட்டப்பட்ட வேவ் ரைடர் வகையின் கரையோர ரோந்து படகுகளின் (Accommodation type Wave Rider IPCs - P 265 and P 266) செயற்பாடு நடவடிக்கைகள் தொடங்கும் நிகழ்வு வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன அவர்களின் தலைமையில் 2024 செப்டெம்பர் 02 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தில் இடம்பெற்றது.

03 Sep 2024

கடற்படையினரின் பங்களிப்புடன் ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் நிறுவப்பட்டுள்ள சூரிய சக்தி அமைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் நிறுவப்பட்ட சூரிய சக்தி அமைப்பு 2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான திரு.சாகல ரத்நாயக்க அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது.

31 Aug 2024

24 நேரடி நுழைவு அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்றது

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படைக்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 24 அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2024 ஆகஸ்ட் 30) கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் அதிகாரி கொமடோர் ரொஹான் ஜோசப் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.

30 Aug 2024

சீன போர்க்கப்பல்கள் தங்களது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டன

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 26 ஆம் திகதி இலங்கைக்கு வந்த சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (Chinese People’s Liberation Army Navy) போர் கப்பல்களான “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற மூன்று போர்க்கப்பல்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகுவுடனான கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2024ஆகஸ்ட் 29,) இலங்கை விட்டு வெளியேறியதுடன் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளை பின்பற்றி புறப்படும் கப்பல்களுக்கு பிரியாவிடை வழங்கினர்.

29 Aug 2024

இந்திய கடற்படைக் கப்பல் ‘INS Mumbai’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 26 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படையின் ‘INS Mumbai’ கப்பல், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாஹுவுடன் இணைந்து நடத்திய கூட்டுப் பயிற்சியின் பின் இன்று (2024 ஆகஸ்ட் 29,) இலங்கை விட்டு வெளியேறியது. புறப்பட்ட கப்பலுக்கு கடற்படை மரபுகளை பின்பற்றி இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் பிரியாவிடை வழங்கினர்.

29 Aug 2024

இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவை 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நியமித்துள்ளார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் இது தொடர்பான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

27 Aug 2024

ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீர்ரொருவருக்கு சக்கர நாற்காலியொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது

யுத்தத்தின் போது ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீரர் எச்.ஜே.புஷ்பகுமாரவுக்கு சக்கர நாற்காலியொன்று வழங்கும் நிகழ்வு இன்று (2024 ஆகஸ்ட் 26) குறித்த சிரேஷ்ட மாலுமியின் இல்லத்தில் பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் பிரியால் விதானகே தலைமையில் நடைபெற்றது.

26 Aug 2024

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மூன்று சீன போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (Chinese People’s Liberation Army Navy) போர்க்கப்பல்களான “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற மூன்று போர்க்கப்பல்களும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 26) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் வருகை தந்த கப்பல்களை கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டது.

26 Aug 2024

இந்திய கடற்படையின் ‘INS Mumbai’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Mumbai’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

26 Aug 2024