நிகழ்வு-செய்தி
கடற்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மாணவச் சிப்பாய் அதிகாரிகள் 59 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் 68வது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஐம்பத்தாறு (56) மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கும், மூன்று (03) பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவச் சிப்பாய் அதிகாரிகள் உட்பட ஐம்பத்தொன்பது (59) மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2025 ஆகஸ்ட் 12) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
12 Aug 2025
இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கௌரவ டேவிட் பைன் (David Pine) அவர்கள் உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக இன்று (2025 ஆகஸ்ட் 12) தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில், தேசிய நீரியல் நிபுணர் மற்றும் கடற்படை நீரியல் துறைத் தலை வராகவும் அக் கட்டளையின் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றும் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவை சந்தித்தார்.
12 Aug 2025
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’ கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’ இன்று (2025 ஆகஸ்ட் 11) காலை திருகோணமலை துறைமுகத்தை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை வரவேற்றனர்.
11 Aug 2025
வாழைச்சேனை மீனவ சமூகத்தினருக்காக அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சித் திட்டம்

இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 ஆகஸ்ட் 07 ஆம் திகதி திருகோணமலை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
11 Aug 2025
பாததும்பர தொழில்நுட்பக் கல்லூரியை ஒரு உகந்த கற்றல் சூழலாக மாற்றுவதற்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட "சிரம மெஹேயும" திட்டத்தின் கீழ், பாததும்பர தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தை மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழலாக மாற்றுவதற்கான கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு 2025 ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 06 வரை மேற்கொள்ளப்பட்டது.
11 Aug 2025
வெலிசறை கடற்படை மருத்துவமனை வளாகத்தில் சுழியோடி மருத்துவம் குறித்த பட்டறை மற்றும் கண்காட்சி நடைப்பெற்றது

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியினால் (Sri Lanka College of Military Medicine - SLCOMM) ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று (03) நாள் பட்டறை மற்றும் சுழியோடி மருத்துவ கண்காட்சி 2025 ஆகஸ்ட் 06 முதல் 08 வரை வெலிசறை கடற்படை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
09 Aug 2025
அமெரிக்க கடற்படை அடிப்படை சீல் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்ற லெப்டினன்ட் கோயான் சாமிதவுக்கு சிறப்பு பாராட்டுக்கள்

உலகின் மிகவும் மேம்பட்ட சிறப்புப் படைப் பயிற்சித் திட்டமான அமெரிக்க கடற்படையின் (US Navy, Naval Special Warfare Basic Training Command) மூலம் நடத்தப்பட்ட மிகவும் கடினமான அடிப்படை SEAL பயிற்சிப் பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இலங்கையர் என்று (SEAL Trident pin) ஐ பெற்ற லெப்டினன்ட் கோயான் சாமித, இன்று (2025 ஆகஸ்ட் 05) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவைச் சந்தித்தார். SEAL பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, இலங்கை கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெரும் புகழையும் பெருமையையும் கொண்டு வந்ததன் மூலம் முழு இலங்கை இளைஞர்களுக்கும் அவர் ஏற்படுத்திய மதிப்புமிக்க முன்மாதிரியைப் கடற்படைத் தளபதி பாராட்டினார்.
05 Aug 2025
கற்பிட்டி புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவை சிறப்புற நடத்த கடற்படையின் பங்களிப்பு

கற்பிட்டி, தலவில், புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா வழிபாடு 2025 ஆகஸ்ட் 03 ஆம் திகதி கற்பிட்டி, தலவில், புனித அன்னம்மாள் தேவாலயத்தில் சிலாபம் ஆயர் வணக்கத்துக்குரிய டான் விமல் ஸ்ரீ ஜயசூரிய அவர்களின் தலைமையில் ஏராளமான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றதுடன், அதனை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது.
04 Aug 2025
கண்டி எசல மகா பெரஹெராவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பை கடற்படை உறுதி செய்தது

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹெர 2025 ஜூலை 30 அன்று குபல் பெரஹெர வீதி உலாவுடன் தொடங்கியது, மேலும் ஆகஸ்ட் 09 வரை தொடரும் எசல பெரஹெராவில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக இலங்கை கடற்படை ஒரு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாட்டை செயல்படுத்தியுள்ளது.
04 Aug 2025
சவுதி அரேபிய இராச்சியத்தின் தூதரகத்தில் உள்ள இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இந்தியாவின் புது தில்லியில் உள்ள சவுதி அரேபிய இராச்சியத்தின் தூதரகத்தில் இலங்கை பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றும் Captain (Navy) Hussain O Alkowaileet, இன்று (2025 ஆகஸ்ட் 04) கடற்படைத் தலைமையகத்தில் ஒரு உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தார்.
04 Aug 2025